முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்யா’ஸ் டுடோரியல்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Regina-Cassandra 2022-06-27

Source: provided

தமிழின் பிரபல ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல்  இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ்  இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆஹா தமிழ் சார்பில் பேசிய அஜித் தாகூர், இந்த கதையை கேட்டவுடன் இதில் சவாலான பல கதாபாத்திரங்கள் இருப்பது புரிந்தது. அந்த பாத்திரங்களுக்கு ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா இந்த கதையில் பொருத்தமாக இருந்தார்கள். இயக்குனர் பல்லவி இந்த தொடரை சிறப்பாக இயக்கியுள்ளார். இது ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். நாங்கள் எப்போதும் புதுமையான கதைகளை உருவாக்க விருப்பப் படுவோம். அந்த வகையில் ஆன்யா’ஸ் டுடோரியல் எங்களது முக்கியமான படைப்பாக இருக்கும். இந்த தொடரை எடுத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார். பின்னர் இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி பேசுகையில், இந்த தொடர் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ஆர்கா மீடியா ஒர்க்ஸ்க்கு நன்றி. இந்த தொடரை இரு மொழிகளில் உருவாக்கினோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து