முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல், பிரியங்கா மரியாதை

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2022      இந்தியா
Rahul-Priyanka 2022-08-20

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார். 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், " அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது மரியாதை" என்று பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்' என்று பதிவிட்டு ராஜீவ் காந்தி குறித்த ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து