Idhayam Matrimony

ராணி எலிசபெத்தின் உடலுக்கு ஜனாதிபதி முர்மு அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      உலகம்
Elizabeth 2022 09 14

Source: provided

லண்டன்  இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். பின்னர் நேற்று இங்கிலாந்து ராணியின் உடலுக்கு ஜனாதிபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். 

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்தார். அதை தொடர்ந்து நேற்று ராணியின் உடலுக்கு ஜனாதிபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். மேலும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச் சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ளவுள்ளார்.ராணி எலிசபெத்தின் உடலுக்கு  

ஜனாதிபதி முர்மு அஞ்சலி

லண்டன் ; இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். பின்னர் நேற்று இங்கிலாந்து ராணியின் உடலுக்கு ஜனாதிபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். 

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்தார். அதை தொடர்ந்து நேற்று ராணியின் உடலுக்கு ஜனாதிபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். மேலும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச் சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ளவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து