முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஜாப் அணிய மறுத்ததால் அமெரிக்க பெண் செய்தியாளருக்கு பேட்டியளிக்க ஈரான் அதிபர் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      உலகம்
Christina 2022--09-23

Source: provided

வாஷிங்டன் : ஹிஜாப் அணிய மறுத்ததால் அமெரிக்க பெண் செய்தியாளருக்கு பேட்டியளிக்க ஈரான் அதிபர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரிடம் அமெரிக்காவின் பிரபல சி.என்.என். செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் கிறிஸ்டினா அமன்புர் பேட்டி எடுக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், பேட்டி எடுக்க வேண்டுமானால் செய்தியாளர் கிறிஸ்டினா அணிய வேண்டும் என ஈரான் அதிபர் ரைசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இங்கு ஹிஜாப் சட்டமில்லை என்றும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுத்து விட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இது தொடர்பாக ஈரான் அதிபருக்காக வைக்கப்பட்ட இருக்கை காலியாக இருக்க அதற்கு எதிர்புறம் தான் அமர்ந்திருப்பது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்டினா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து