முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதியதில் சிறுமி உள்பட 6 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      தமிழகம்
Lorry-car 2023 03 19

Source: provided

திருச்சி : திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி பகுதியில் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியும் , ஆம்னி வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம்  எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட 9  பேர் ஆம்னி வேனில் கும்பகோணத்திற்கு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து நாமக்கலுக்கு மரக்கட்டைகள் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியும் திருவாசி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்னி வேனில் பயணம் செய்த முத்துசாமி (58), ஆனந்தாயி (57), தாவணா ஸ்ரீ (09), திருமூர்த்தி (43), சந்தோஷ்குமார் (31), அப்பு(55)  ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தனபால், திருமுருகன், சகுந்தலா ஆகிய 3 பேர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து காரணமாக திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து