எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வில் பங்கேற்காமல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் அந்த பாராளுமன்றம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதில் புதிய நவீன வசதிகள் எதையும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது. இதனால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார்.
அதன்படி தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள் அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும்.
புதிய பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகள் 5 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு சுமார் 1,200 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் கருதப்படுகிறது. பழைய பாராளுமன்றம் வட்ட வடிவில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டிட கலை பாணி அதில் காணப்படுகிறது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இன்று சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிவித்துள்ளன. என்றாலும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது. அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும்.
அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த செங்கோல் அலகாபாத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர். இன்று காலை புதிய பாராளுமன்றத்தில் நடக்கும் விழாவில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் ராஜ மேளம் முழங்க அவர்கள் செங்கோல் சுமந்து வருவார்கள். அதை புனித நீரால் தூய்மைப்படுத்தி பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்கள். முன்னதாக இன்று காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவை முடிந்ததும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க. வின் தோழமை கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சிவசேனா கட்சிகள் பங்கேற்கின்றன. எதிர்க்கட்சிகளில் பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள வருகின்றன. வரும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். அந்த கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு
08 May 2025சென்னை, தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
தொடர்ந்து விழிப்போடு இருங்கள்: பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
-
பழனிசாமியின் கபட நாடகங்கள் ஒருநாளும் வெற்றி பெறாது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
08 May 2025சென்னை, தி.மு.க.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
08 May 2025அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியா-பாக். போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
08 May 2025இஸ்லாமாபாத், அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு..!
08 May 2025புதுடெல்லி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
08 May 2025சென்னை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்வு
08 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
08 May 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் தேர்ச்சி
08 May 2025புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
கேளிக்கை வரி மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல்
08 May 2025சென்னை, கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
08 May 2025புதுடெல்லி, பஞ்சாப்பில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு
08 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ரவூப் அசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.