முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக. 14-ல் மவுன்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை : ப.சிதம்பரம் சொல்கிரார்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
Chidambaram 2023-05-06

Source: provided

புதுக்கோட்டை : 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தானில் இருந்தார் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கோல் விவகாரத்தில் புனைக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. வரலாற்று ஆசிரியர்கள் நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை எழுதியுள்ளனர். 

அதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரயிலில் சென்று, ஆகஸ்ட் 14, 1947-ல் மாலையில் நேருவின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். விமானத்தில் செல்லவில்லை. அப்போது, அந்த செங்கோலை நினைவு பரிசாக அளிப்பதாக கூறி நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியுள்ளார். 

அந்த நேரத்தில் நேருவுக்கு பலநூறு நினைவுப் பொருட்கள் வந்தன. அது அத்தனையும் பத்திரப்படுத்தி அலகாபாத் மியூசியத்தில் வைத்திருந்தனர். அவ்வளவுதான்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி மவுன்ட் பேட்டன் டெல்லியிலேயே இல்லை. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்தார். அன்று பாகிஸ்தானின் சுதந்திரநாள். இரவு 7 மணியளவில் தான் மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லி வந்தார். 

பிறகு 11 மணிக்கு மேல் சுதந்திரம் கொடுப்பதற்கான விழாவை கொண்டாட வருகிறார். 12 மணியளவில் சுதந்திரம் கிடைத்தது. அப்போது நேரு உரையாற்றினார். மியூசியத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்த செங்கோல், நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்கக்கோல் என்று தான் எழுதியிருந்ததாக அலகாபாத் மியூசியத்தின் தலைமை அதிகாரியே கூறுகிறார். 

மற்றவர்கள் சொல்வதுபோல் வாக்கிங் ஸ்டிக் (கைத்தடி) என்றெல்லாம் எழுதியிருக்கவில்லை. அதெல்லாம் புனைக் கதைகள். வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவது மட்டுமே வரலாறு. மற்றவர்கள் எழுதுவது புனைக் கதைகள். நடக்காததை எல்லாம் நடந்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து