எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்ட திட்டமிடப்பட்டது.
அதன்படி, முதல் கட்டடமான ‘ஏ’ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ‘பி’ பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டடமான ‘சி’ பிளாக் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ஆம் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிறகு, ஜூன் 15-ஆம் தேதி கிண்டி மருத்துவமனையை திறந்துவைக்க தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திறப்பு விழா தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஓரிரு நாள்களில் தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |