முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா அதிபரின் உடல்நிலை பற்றி தென்கொரியா அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      உலகம்
KIM 2023 03 15

பியோங்கியாங், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய அதிபர் கிம்மின் உடல் எடையை கணித்துள்ள தென்கொரியா அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளது. 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட தகவல்கள் குறித்து அந்நாட்டு அரசு தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து தென்கொரியா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணிதத்தின் படி கிம்மின் உடல் எடை 140 கிலோ வரை இருக்கும் என தென்கொரியா தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக புகையிலை, சிகரெட், நொறுக்குத் தீனிகள் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ள தென்கொரியா,  குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம், ஒழுங்கற்ற உணவு பழக்கத்திற்கு கிம் அடிமையாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம்மிற்கு 39 வயதாகும் நிலையில் அவர் உட்பட வடகொரியாவின் பல அரசு அதிகாரிகள் தூக்கமின்மை காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து