தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகைபிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாகும் சுவீடன்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      உலகம்
smoking-2023-06-01

ஸ்டாக்ஹோம்,  தினசரி புகைபிடித்தல் சதவீதம் குறைந்து வருவதால், புகைப்பிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்வீடன் மாறுகிறது. 

புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை வலியுறுத்துவதுடன், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மே 31-ம் தேதி உலக புகையிலை இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டில், உணவை அதிகரியுங்கள், புகையிலையை அல்ல என்ற கருத்து பரப்பப்படுகிறது. 

இந்நிலையில், ஸ்வீடனில் தினசரி புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புகைபிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக அது விரைவில் மாற உள்ளது. 

புகைபிடிப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே புகைபிடிக்கின்றனர். இது கடந்த ஆண்டு 5.6 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் குறைந்துள்ளது. 

20 ஆண்டுகளுக்கு முன், மொத்த மக்கள் தொகையில், புகைபிடிப்பவர்கள் 20 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு, இளைஞர்கள் மத்தியில் அதிகளவு இருப்பதே இதற்குக் காரணம் என ஸ்வீடன் மக்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஸ்வீடன் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த உல்ரிகா கூறுகையில், 

முதலில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை ஏற்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து படிப்படியாக பள்ளி மைதானங்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதும், அது பயன்பாட்டில் இல்லாததற்கு முக்கிய காரணமாகும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து