முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க. பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வானார் வைகோ: அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      அரசியல்
Vaiko 2023 05 01

சென்னை, ம.தி.மு.க.வில் 5-வது அமைப்பு தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு நாளை 3-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வருகிற 14-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் கட்சி தலைவர் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டி நடைபெற உள்ளது, ம.தி.மு.க.வை சேர்ந்த பலரும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ மீண்டும் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதே சமயம் அவை தலைவர் பதவிக்கு அர்ஜுனராஜ் ,பொருளாளர் பதவிக்கு செந்தில் அதிபன், முதன்மை செயலாளர் பதவிக்கு துரை வைகோ, துணை பொது செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொதுச் செயலாளர் பதவிக்கு வைகோ தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.  எனவே, வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வானார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். . இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை 3-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து