Idhayam Matrimony

எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      உலகம்
Rahul-Gandhi-1 2023-06-01

Source: provided

வாஷிங்டன்:எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது. நான் என்னனென்ன வேலைகளைச் செய்கிறேன் எனத் தெரிந்து கொள்ள எனது அரசு விரும்புவதாக நான் கருதுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதம் ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை பாதி நாள் முழுவதும் சிலிகான் வேலியின் 'ஸ்டார்ட் அப்' தொழில் முனைவோர்களுடன் செலவிட்டார்.

ப்ளக் அண்ட் ப்ளே அரங்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் குழு விவாதத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் இந்தியாவிலிருந்து அவருடன் பயணம் செய்யும் முக்கிய உதவியாளர்களுடன் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

ப்ளக் அண்ட் ப்ளே நிறுவனர் அமிடி மற்றும் ஃபிக்ஸ் நெக்ஸ் ஸ்டார்ட் அப்-ன் நிறுவனர் ஷான் ஷங்கரனுடன் நடந்த காரசாரமான விவாதத்தில், ராகுல் காந்தி இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் உள்ள சாமானியனிடத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது அவர்,"இந்தியாவில் நீங்கள் ஒரு தொழில்நுட்பத்தை பரப்ப விரும்பினால், ஒப்பீட்டளவில் அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஒரு அமைப்பை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தரவுகளைப் பொறுத்தவரை இந்தியா போன்ற நாடுகள் அதன் உண்மையான திறனை அறிந்திருக்கின்றன. அங்கு தரவுகளின் பாதுகாப்பு குறித்த முறையான ஒழுங்குமுறைகளின் தேவை இருக்கிறது. என்றாலும் பெகாசஸ் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து நான் கவலை கொள்ளவில்லை.

எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன். ஒரு தேசத்திற்கான தனிநபர்களுக்கான தனியுரிமை தகவல் குறித்த கொள்கைகளை நீங்கள் நிறுவ வேண்டும்" என்றார். அப்போது விளையாட்டாக தனது ஐபோனை எடுத்து ‘ஹலோ மிஸ்டர் மோடி..’ என்றார்.

தொடர்ந்து "ஒருநாட்டின் அரசு உங்களுடைய போனை ஒட்டுக்கேட்க விரும்பினால், யாரும் உங்களைத் தடுக்க முடியாது, இது என்னுடைய எண்ணம். ஒரு நாடு உங்கள் போனை ஒட்டுக்கேட்க விரும்பும் போது, அது சண்டையிடுவதற்கான சரியான களம் இல்லை. நான் என்ன வேலைகள் எல்லாம் செய்கிறேன் என்று தெரிந்து கொள்ள அரசு விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன்" என்று குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து