முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழங்கால் வலியால் அவதிப்பட்ட டோனிக்கு வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      விளையாட்டு
Dhoni 2023-06-02

Source: provided

மும்பை : நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இடது முழங்காலில் வலியுடனேயே டோனி விளையாடி நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சென்னை சாம்பியன்...

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

முழங்காலில் காயம்... 

இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் வலியுடனே விளையாடினார். 

வெற்றிகரமாக முடிந்தது... 

இதையடுத்து, முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து