Idhayam Matrimony

ஜூன் 8-ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா : வேலூர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
Amit-Shah 2023 04 09

Source: provided

வேலூர் : வேலூரில் வரும் 8-ந் தேதி நடக்க உள்ள மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

வேலூரை அடுத்த கந்தனேரியில் வருகிற 8-ந்தேதி மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், மத்திய மந்திரிகள் அமித்ஷா, வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்படி பா.ஜ.க. தலைமை அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்து முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். அதைத்தவிர தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து