Idhayam Matrimony

ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் 10 கோடி பேர் 'நீரிழிவு நோயால்' பாதிப்பு : தமிழகத்துக்கு 6-வது இடம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      தமிழகம்
ICMR 2023 06 09

சென்னை, இந்தியாவில் அதிக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை INdia DIABetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழான 'தி லான்செட்' (The Lancet) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட 1,13,043 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 33,537 பேர் நகர்ப்புறத்தில் இருந்தும், 79,506 பேர் கிராமப்புறங்களில் இருந்தும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 26.4 சதவீதமும் குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4.8 சதவீதமும் நோய் பரவல் உள்ளது. இதன்படி இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

தேசிய அளவில் 15.3 சதவீதத்தினர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலை நிலையில் இருப்பது (pre diabetes) ஆய்வில் தெரிய வந்த நிலையில். அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 31.3 சதவீத பேரும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 6.8 சதவீத பேரும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளனர்.

இதில் தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமபுறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் நோய்ப் பரவல் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. நகர்ப்புறங்களில் இது 10 முதல் 14.9 வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து