Idhayam Matrimony

இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற சென்னை புதுமண தம்பதி, போட்டோ ஷூட் நடத்தியபோது நீரில் மூழ்கி உயிரிழப்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Indonesia 2023 06 10

Source: provided

சென்னை : இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற சென்னையை சேர்ந்த புதுமண தம்பதி கடலில் போட்டோஷூட் நடத்திய போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும்  ஜூன் மாதம் 1-ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். 

இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்ற போது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர். 

இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து