முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தல்: குமாரசாமி கண்ணீர்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், மே. 13 - கர்நாட சட்டசபை தேர்தலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கண்ணீர் மல்க தெரிவித்தார். மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கர்நாடக சட்டசபை தேர்தலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை. நான் தனி ஆளாக போராடினேன். நான் எதிர்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை மதிக்கிறேன். இதற்கு முன்பு எதிர்கட்சித் தலைவர்களாக இருந்த ஹெச். டி. தேவகவுடா, எடியூரப்பா மற்றும் சித்தராமையா ஆகியோரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்படுவேன். எதிர்கட்சிகள் என்றால் இப்படித் தான் நடக்க வேண்டும் என்றுள்ள நடைமுறையை மாற்றி சிறந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவேன். 6 மாதத்தில் அரசின் நடைமுறைகள் தெரிந்து விடும். அதனால் அரசுக்கு 6 மாத கால அவகாசம் அளிப்பேன். அதுவரை எந்த விமர்சனமும் செய்ய மாட்டேன் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்