முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் 12-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி

சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 12-ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18-ம்தேதி முதல் 26-ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலை தூய்மை செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 12-ம் தேதி (செவ்வாய்) நடைபெற உள்ளது.

அன்று அதிகாலை பூஜைகளுக்குபின் காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும். தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். 

இதனால் அன்று சுமார் 5 மணி நேரம் வரை பக்தர்கள் இலவச தரிசனம் உள்பட அனைத்து தரிசனமும் நிறுத்தப்படும். இதையடுத்து 11 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து