முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிள்ளையார்பட்டி சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது : வரும் 18-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Pilliyarpatti-Chaturthi

Source: provided

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு இக்கோயிலில் வரும்.19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பின்னர் விநாயகர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கொடிமரத்திற்கு முன் அங்குசத்தேவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையொட்டி உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. 

இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை 12-ம் தேதி இரவு பூத வாகனத்திலும், 13-ம் தேதி இரவு கமல வாகனத்திலும், 14-ம் தேதி  இரவு ரிஷப வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருகிறார். வரும் 15-ம் தேதி தேதி மாலை 5 மணிக்கு கஜமுக சூரசம்காரம் நடைபெறுகிறது. 16-ம் தேதி இரவு மயில் வாகனத்திலும், .17-ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி உலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 18-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து