தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் - கால் இறுதியில் அபிமன்யு

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      விளையாட்டு
Abhimanyu 2023-09-17

Source: provided

பெல்கிரேடு : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்று வருகிறது. 2024-ம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள இந்தத் தொடரில் இந்திய வீரர்கள், உலக மல்யுத்த கூட்டமைப்பு கொடியின் கீழ் பங்கேற்றுள்ளனர். ஏனெனில் இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

ஆடவருக்கான 70 கிலோ எடைப் பிரிவில் உலகத் தரவரிசையில் 26-வது இடம் வகிக்கும் இந்தியாவின் அபிமன்யு, 7-ம் நிலை வீரரான உக்ரைனின் இகோர் நிகிஃபோர்க்குடன் மோதினார். இதில் அபிமன்யு 19-9 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் மால்டோவாவின் நிக்கோலாய் கிரஹ்மேஸை 13-2 என்ற கணக்கில் தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் அபிமன்யு.

61 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் தகியா முதல் ஆட்டத்தில் மால்டோவாவின் லியோமிட் கோல்ஸ்னிக்கை 10-5 என்ற கணக்கில் தோற்கடித்தார். ஆனால் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஆகாஷ் தகியா 4-7 என்ற கணக்கில் உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் ஜஹோங்கிர்மிர்சா துரோபோவிடம் தோல்வி அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து