முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      விளையாட்டு
Australian-team 2023-09-17

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடர் வரும் 22ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறாத முன்னணி வீரர்கள் இந்திய தொடருக்கு திரும்பி உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் காயம் அடைந்த டிராவிஸ் ஹெட் அணியில் இடம் பெறவில்லை. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீன் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து