எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாமக்கல் : சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா, கிரில் சிக்கன் தயார் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வந்தது. இந்த ஓட்டலில் இருந்து சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் ஓட்டலுக்கு சென்று சவர்மா உள்ளிட்ட உணவு வகைகளை பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர்.
அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தயாரிக்க தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட உணவக உரிமையாளர் நவீன் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.