முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமானிய மக்களையும் அரசியலில் சேரத் தூண்டும்: மகளிர் மசோதாவுக்கு நடிகை தமன்னா பாராட்டு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      இந்தியா
Tamana 2023-09-21

Source: provided

புது டெல்லி:புதிய பாராமன்ற கட்டிடத்துக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த  நடிகை தமன்னா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாராட்டி கருத்து தெரிவித்தார்.

கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது.  இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் முதல் மசோதாவாக, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், புதிய பாராடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர். பாராளுமன்ற கட்டிட்டத்தை பார்த்த  பின்பு அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு வரவேற்று கருத்து தெரிவித்தனர். 

இது தொடர்பாக நடிகை தமன்னா கூறுகையில், இது ஒரு விழிப்புணர்வு என கருதுகிறேன். திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்குள் நுழைவது கடினம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதா என்பது சாமானிய மக்களையும் அரசியலில் சேரத் தூண்டும் என்றார்.  நடிகை  திவ்யா தத்தா கூறுகையில், இந்த மசோதா மிக முக்கியமான முன்னேடுப்பு. இதன்மூலம் பெண்கள் முன்னிலைப்படுத்தபடுவார்கள். புதிய நாடாளுமன்றத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து