எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி முதல் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகம், பொது இடங்கள் என பல்லாயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
இதில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 1,519 சிலைகள், தாம்பரத்தில் 425 சிலைகள், ஆவடியில் 204 சிலைகள் என மொத்தம் 2,148 சிலைகள் காவல் துறையின் அனுமதியுடன் பொது இடங்களில் கடந்த ஒரு வாரமாக வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் ஆகிய 4 கடற்கரைகளில் விசா்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் 1,948 விநாயகா் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலை, பூ, வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் உள்பட இதர கழிவுகள் கடற்கரைகளில் போடப்பட்டது. இந்த கழிவுகள் கடலுக்குள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்குள் இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 70 டன் கழிவுகளை மெரினா கடற்கரையில் இருந்து மட்டும் அகற்றியுள்ளனர். இதனால், பெருமளவு கடல் மாசு தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலில் கரையாமல் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை கரைக்கும் பணிகளிலும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இந்த பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.