முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரமுகி - 2 திரைப்படம் நாளை வெளியீடு: ரஜினியை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      சினிமா
Raghava-Rajini 2023-09-26

சென்னை, சந்திரமுகி - 2 திரைப்படம் நாளை 28-ம் தேதி  வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்தை நடிகர் ராகவா லாரன்ஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் சந்திரமுகி -2. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 

சந்திரமுகி - 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸ், 

என் தலைவர் மற்றும் குரு ரஜினியை சந்தித்து ஜெயிலர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். சந்திரமுகி- 2 திரைப்படம் 28-ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அவரிடம் ஆசி பெற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து