முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களில் கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணம்

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

சென்னை :  கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

சென்னையில் இருந்து நாளை  (28-ம்  தேதி) காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் கவர்னர் அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் செல்கிறார். அங்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார். 

அதன் பிறகு ஆழ்வார் குறிச்சிக்கு சென்று பாரம்பரிய பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று ஆசிரம குழந்தைகள் மற்றும் பணியாளர்களை சந்திக்கிறார். சிவ சைவபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து  29-ம் தேதி கோவிந்தப்பேரி நெல்கட்டும் செவல் கிராமம் செல்கிறார். அங்கு பூலித்தேவர் அரண்மனையை கவர்னர் ரவி பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து ஒண்டி வீரன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுகிறார். 

பின்னர் சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன் பிறகு விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 29-ம் தேதி இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து