தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக். 3-ம் தேதி அண்ணாமலை ஆலோசனை

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
Annamalai 2023 03 18

Source: provided

சென்னை:சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் வரும் 3-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி வரும்  3-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணி முறிவு மற்றும் தேசிய தலைமையின் முயற்சி தோல்வியைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்டோரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து