தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரமுகி-2 விமர்சனம்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      சினிமா
Chandramukhi-2-Review 2023-

Source: provided

ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கியிருக்கும் படம் சந்திரமுகி 2. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 வெளியாகி உள்ளது. கதை, தொழிலதிபர் ராதிகாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத வகையில் பல பிரச்சனைகள் நடக்கிறது, பிரச்சனைகளிலிருந்து விடுபட குலதெய்வ வழிபாடு நடத்த வேண்டும் என குடும்ப சாமியார் சொல்கிறார். அதனால் அங்கு செல்லும் ராதிகா குடும்பத்தினர் வழியில் வடிவேலுக்கு சொந்தமான அரண்மனையில் தங்குகிறார்கள். அந்த இடத்தில் தங்கி இருக்கும் சந்திரமுகியும், வேட்டையனின் ஆவியும் வெளியே வருகிறது. இதற்குப் பின்னர் அவர்கள் என்ன பாதிப்புக்கு ஆளானார்கள் என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை. ராகவா லாரன்ஸ் ரஜினியை ஆங்காங்கே நினைவுபடுத்தி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார். வடிவேலு, கங்கனா ராணாவத்,  மகிமா நம்பியார், லட்சுமிமேனன் ஆகியோர் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்கள். நட்சத்திர பட்டாளங்கள் குவிந்திருந்தும் முதல் பாதி ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இரண்டாம் பாதியில் சந்திரமுகி தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக செதுக்கி படத்தை வெற்றி பெற வைத்து இருக்கிறார் இயக்குநர் பி வாசு. மொத்தத்தில் சந்திரமுகி 2  சுமாரான படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து