முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      தமிழகம்
CM-2 2023-10-02

Source: provided

சென்னை :  இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு சார்பில்,  சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகளான, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் முனைவர் கே. சிவன், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம்,  திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் வீ.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா,  சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு,  யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி,  உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ .ஆசீர் பாக்கியராஜ், சந்திரயான் - 2 திட்ட இயக்குநர் மு.வனிதா, ஆதித்யா l1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேல் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவத்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, 

நம்ம தமிழ் அறிவு என்பதே அறிவியல் அறிவுதான். எதையும் பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவுதான் தமிழறிவு. விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழகத்தின் அறிவாக இருந்தது. அதுதான் இந்த அறிவியல் மேதைகளை உருவாக்கி இருக்கிறது. 

இன்னும் சொன்னால், இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிகப் பெருமைக்குரியது. மிகமிகச் சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக 2 பேர் பெண்கள்.

தமிழக இளைய சமுதாயத்தினர் இவர்களைத்தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த ஒன்பது பேருக்கும் தமிழக அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவுமில்லை. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தின் அடையாளமாகதான் தமிழக அரசு இந்தத் தொகையை வழங்கியிருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டு, மேலும், மேலும் இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

மேலும் பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க  அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். 

இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து