தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலககோப்பை முதல் போட்டி- கோலி பங்கேற்பது சந்தேகம்? - அணியிலிருந்து விலகி மும்பை சென்றதால் குழப்பம்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்தியா விளையாட இருந்த முதல் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது பயிற்சி ஆட்டம் தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி பலம் குன்றிய நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டும் அணியிலிருந்து பாதியில் விலகி மும்பைக்கு சென்றிருக்கிறார். விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக தான் அணியை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக பிசிசிஐ இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட விளக்கத்தையும் தரவில்லை. உலகக் கோப்பை தொடர்க்கு முன் ஒரு வீரர் இப்படி பாதியில் அணியை விட்டு செல்வது ஏன் என்று இதுவரை ரசிகர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.

விராட் கோலி குடும்பத்தினருக்கு ஏதேனும் பிரச்சனையா என்று குறித்தும் தகவல் ஏதுமில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் தான் இருக்கிறது. ஆனால் விராட் கோலி இப்படி முக்கியமான கட்டத்தில் பாதியில் ஊர் திரும்பி இருப்பது அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இதே போல் ஒரு சூழ்நிலையில்தான் 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களில் இருந்த நிலையில் தோனிக்கு குழந்தை பிறந்தது. 

ஆனால் தனது மனைவியுடன் பிரசவப் பொழுதை கழிக்காமல் தம் நாட்டுக்காக விளையாட வந்திருப்பதாகவும் முதலில் நாட்டுடைய பணி தான் முக்கியம் பிறகுதான் குடும்ப பணி என்று கூறிவிட்டு தோனி உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து