முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இருந்து விலகினார் பிரபல நடிகை விஜயசாந்தி

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2023      சினிமா      அரசியல்
vijayashanthi-2023-11-16

திருப்பதி, நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து  விலகினார்.

கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளார். 

தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர். முன்னாள் எம்.பி.க்கள் கோமதி ரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த் மற்றும் மற்றொரு தலைவர் எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர். இதில் ராஜகோபால் ரெட்டியும், விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்தனர். 

தெலுங்குத் திரைப்படங்களில் அதிரடி வேடங்களில் நடித்ததற்காக லேடி அமிதாப் என்று அழைக்கப்பட்ட பிரபலமான நடிகை விஜயசாந்தி, 1997-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.

தெலுங்கானாவுக்கு தனி மாநிலம் கோரி போராடுவதற்காக, 2005-ல் பா.ஜ.க.வில் இருந்து விலகி தெலுங்கானா என்ற தனி அமைப்பை உருவாக்கினார். பின்னர் அவர் சந்திரசேகர ராவ் கட்சியில் இணைந்து 2009-ல் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 

ஆகஸ்ட் 2013-ல், தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, டி.ஆர்.எஸ். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விஜயசாந்தியை இடைநீக்கம் செய்தது. பின்னர் காங்கிரஸில் சேர்ந்த அவர், 2014 தேர்தலில் மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2020-ல் பா.ஜ.க.வுக்குத் திரும்பினார். தற்போது அதில் இருந்து விலகியுள்ளார்.விஜயசாந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து