முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள்: பள்ளிக்கல்வித் துறை தகவல்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதே போல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.

அதன்படி, 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வை போல் அரையாண்டு தேர்விலும் இதே போல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட உள்ளது. 

தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பாடங்களுக்கான வினாத்தாளை எமிஸ் என்ற தளத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்ய வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து