முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொமினிகன் குடியரசில் தொடர் கனமழை, வெள்ளம்: 21 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      உலகம்
Dominican 2023-11-22

சான்டா டோமிங்கோ, டொமினிகன் குடியரசில் பெய்த  தொடர் கனமழை வெள்ளத்திற்கு 21 பேர் பலியாகினர். 

கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசு நாட்டில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

வெள்ள நீரால், பல பாலங்கள் மற்றும் சாலைகளின் ஒரு பகுதிகள் சேதமடைந்து உள்ளன.  வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு சென்றனர். சாலைகளில் இருந்த கார்களை வெள்ள நீர் அடித்து சென்றது.  கட்டிடங்களின் தரை தளங்களை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.  பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்பட்டு, இதுவரை 2,500 பேரை மீட்டுள்ளனர். 2,600 பேரின் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.  கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர்.  

இவர்களில், நெடுஞ்சாலையின் சுரங்க பகுதியில் இருந்த சுவர் திடீரென இடிந்து கார்கள் மீது விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.  வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து