தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: சிக்கியுள்ளோர் குறித்த முதல் வீடியோ மீட்பு குழு வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2023      இந்தியா
Uttarakhand 2023-11-13

டேராடூன், உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர்.

10-வது நாளாக நேற்று மீட்புப் பணி தொடர்ந்த நிலையில் பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகி மீட்புக் குழுவினருக்கு உத்வேகத்தையும், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்தத் தொடர்பை மீட்புக் குழு ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக கேமரா முன் வரச் சொல்லி அடையாளம் கண்டு மீட்புக் குழு பேசியுள்ளது. 

அதுமட்டுமல்லாது, பைப் மூலம் முதன்முறையாக சூடான உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடிக் குடுவைகளில் சுடச்சுட கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அவர்களுக்கு உலர் கொட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிச்சடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களுக்கு விரைவில் மொபைல் போன்களும் சார்ஜர்களும் வழங்கப்படும் என்று மீட்புப் பணிகள் பொறுப்பு அதிகாரி கர்னல் தீபக் பாட்டீல் தெரிவித்துள்ளார். 

உத்தராகண்ட் சுரங்கப் பாதையின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக குஜராத், ஒடிசாவில் இருந்து புதிதாக ராட்சத துளையிடும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 19 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 19 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து