முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க எம்.எல்.ஏ. பாண்டியராஜன் முதல்வருடன் சந்திப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.13 - சட்டசபையில் தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் ஆர்.சுந்தர்ராஜன், தமிழழகன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சட்டசபையில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் தே.மு.தி.க.வின் பலம் 23 ஆக குறைந்துவிட்டது.

இந்த நிலையில் தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வான 'மாபா' பாண்டியராஜன் தே.மு.தி.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். கட்சி நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வந்தார்.

அவர் இன்று பிற்பகல் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தனது தொகுதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, பாண்டியராஜனும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் சேர்ந்தார். இவரையும் சேர்த்து அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தனது கட்சி எம்.எல்.ஏக்களில் மேலும் ஒருவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணிக்கு தாவி இருப்பது தே.மு.தி.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்