எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
பத்து அணிகள்...
17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
பந்துவீச்சு தேர்வு...
இந்நிலையில், 31வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதனைத்தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் முதலில் களமிறங்கினர்.
11 ரன்னில் அவுட்...
4வது ஓவரில் 10 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆங்க்ரீஷ் ரகுவன்ஷி 30 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து நரேனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரசேல் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த நரேன் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதையடுத்து ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர்.
224 ரன்கள் இலக்கு...
20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, அதிகபட்சமாக சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் முதலில் களமிறங்கினர்.ஜெய்ஸ்வால், 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய துருவ் ஜுரேல் (2), அஷ்வின் (8), ஹெட்மயர் (0) ஆகியோர் அடுத்தத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
9 ரன்கள் தேவை...
கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியில் வெற்றிக்கு தேவைப்பட்டது. பட்லர் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். 55 பந்துகளில் சதம் கடந்தார். இருந்தும் அடுத்த 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் மூலம் இரு அணியின் ரன்களும் சமன் ஆனது. கடைசி பந்தில் 1 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் வெற்றி....
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு தனது இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. 224 ரன்களை விளாசிய ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா தரப்பில் ரானா, வருண். நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 107 ரன்களை விளாசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 46 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
புள்ளிப்பட்டியலில் முதலிடம்: கொல்கத்தா அணி புதிய மைல்கல்
16 May 2024கவுகாத்தி:பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கொல்கத்தா அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
-
இன்னும் 2 ஐ.பி.எல். தொடர்களில் விளையாடுவார் எம்.எஸ்.டோனி பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை
16 May 2024சென்னை:மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவி
-
சைகை மொழியில் டி20 வர்ணனை
16 May 2024மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நாளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2024.
17 May 2024 -
கனமழை எச்சரிக்கை: 3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
17 May 2024ஊட்டி : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.
-
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?: மின்வாரியம் விளக்கம் : வாட்ஸ்அப்பிலும் இனி கட்டணம் செலுத்தலாம்
17 May 2024சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
-
போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 May 2024சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
நீண்ட காலம் விளையாட முடியாது:ஓய்வு குறித்து விராட் கோலி
16 May 2024பெங்களூரு:நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ள விராட் கோலி, ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று அவர்
-
ஐ.பி.எல் 65-லீக் ஆட்டம்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
16 May 2024ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
-
மும்பை விளம்பர பதாகை விபத்து: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம்
17 May 2024சென்னை : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு
-
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
17 May 2024சென்னை : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக நீடிப்பு
17 May 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
சுப்ரீம்கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில்சிபல் தேர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
17 May 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
17 May 2024சென்னை : மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வான்கார்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக சலீம் ராம்ஜி நியமனம்
17 May 2024நியூயார்க் : உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.).
-
வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
17 May 2024பியாங்கியாங் : அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப்பயிற்சியை தொடர்ந்து வடகொரியா நேற்று பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
-
உக்ரைன் மீதான போருக்கு அரசியல் தீர்வுதான் வழி : ரஷ்யா, சீனா கருத்து
17 May 2024பெய்ஜிங் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று புடின், ஜி ஜின்பிங் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் : காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
17 May 2024புதுடில்லி : மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
-
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
17 May 2024தென்காசி : பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
-
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை வரை நீட்டிப்பு
17 May 2024சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி.
-
துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
17 May 2024சென்னை : அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
-
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 May 2024சென்னை : தேனி தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 நாட்களுக்குகனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
பொது இடமாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடதல் அவகாசம் : மே 25 வரை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை
17 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 2 கி.மீ. வரிசையில் நின்று தரிசனம்
17 May 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்திற்காக 2 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் கட்டுப்போட்ட கையுடன் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்
17 May 2024பிரான்ஸ் : பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் காயத்திற்காக கட்டுப்போட்ட கையுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.