முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டுமே உருவாக்கி கொண்டிருக்கிறோம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரக்தி

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2025      இந்தியா
peaus-Ghoyal 2023-07-20

புதுடெல்லி, இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா? என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  கேள்வி எழுப்பியுள்ளார்.  

டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய ஸ்டார்ட் அப் துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் உணவு விநியோக செயலிகளில் மட்டும் கவனம் செலுத்தி வேலையில்லாத இளைஞர்களை குறைந்த கூலிகளாக மாற்றியுள்ளோம். இதனால், பணக்கார்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமலேயே உணவு கிடைக்கிறது. இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா? இது ஸ்டார்ட் அப் இல்லை. இதற்கு பெயர் தொழில்முனைவு.

மற்ற பக்கங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ரோபாட்டிக்ஸ், 3 டி உருவாக்கம் மற்றும் அடுத்த தலைமுறை தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் இன்னும் சிப்ஸ், ஐஸ்க்ரீம்களையே தயாரித்துக் கொண்டிருக்கப் போகிறோமா? இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்காலத்துக்கு நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். 

தங்களின் ஸ்டார்ட் அப் பயணத்தில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு அரசு தோள் கொடுத்து ஆதரவு அளிக்கிறது. விடாமுயற்சியுடன் மீண்டும் முயற்சி செய்வதற்கு ஊக்குவிக்கிறது. அதேநேரத்தில் நாம் உள்நாட்டு மூலதனத்தை அதிகரிக்க வேண்டும், வெளிநாட்டு மூலனத்தை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு மூலதனத்துக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவது நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மைக்கு வழி வகுக்கும். இந்தியாவின் மூலதனத்துக்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும், தன்னிறைவை உறுதிப்படுத்தவும் அதிக அளவில் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago
View all comments

வாசகர் கருத்து