முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2025      சினிமா
Modi 2025-04-04

Source: provided

மும்பை : பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார்(87) வயது முதிர்வு மற்றும் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையிலேயே காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மேடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-

பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்ரீ மனோஜ் குமார் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் இந்திய திரையுலகின் ஒரு சின்னமாக இருந்தார், குறிப்பாக தேசபக்தி கதாபாத்திரங்களை அவர் சித்தரித்தது அவரை ஒரு தேசிய அடையாளமாக மாற்றியதற்காக நினைவுகூரப்பட்டார், அது அவரது திரைப்படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜ்குமாரின் படைப்புகள் தேசத்தின் பெருமையின் உணர்வைத் தூண்டின, மேலும் அவரது செயல்கள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என்று கூறியுள்ள மோடி, அவருடன் இருக்கு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago
View all comments

வாசகர் கருத்து