தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      இந்தியா
Lorry 2023-10-19

கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லாரிகளுக்கு எரிபொருளான டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் லாரி ஓட்டுநர்கள் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியில் இருந்து லாரிகளின் இயக்கத்தை நிறுத்திவைத்து 129 லாரி சங்கங்களை உள்ளடக்கிய கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் உள்மாநிலத்துக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படும் 6 லட்சம் லாரிகள் பங்கேற்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காய்கறி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது.

இதனிடையே, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்புத் தலைவர் ஜி.சண்முகப்பா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாகவும், முதலில் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், முதல்வர் சித்தராமையா இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

இந்தப் பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படவில்லை. தொடர்ந்து, கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மீண்டும் நேற்று முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து