முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடல் காஸ்ட்ரோவுடன் ஹமீத் அன்சாரி சந்திப்பு

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஹவானா, நவ. 1 - கியூபா புரட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோலை இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளின் தலைவர்களிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி 4 நாள் பயணமாக பெரு நாட்டுக்கு சென்றார். அந்நாட்டுடன் 4 புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அங்கிருந்து கியூபா சென்ற அன்சாரிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறையில் 6 கர்நாடக இசை பிரிவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட நிருத்ய ரூபா என்ற நாட்டிய குழுவினரின் சிறப்பு நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கியூபாவின் புரட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவை சந்தித்து அன்சாரி பேசினார். 

அப்போது இரு நாட்டு தலைவர்களிடையே உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய ஒலிபரப்பு நிறுவனம் பிரசார் பாரதி மற்றும் கியூபாவின் ஒலி, ஒளிபரப்பு துறை இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. கியூபாவுக்கான இந்திய தூதர் சிந்தப்பள்ளி ராஜசேகர் மற்றும் கியூபா துணை தலைவர் எமிலோ மாய்சஸ் கிரேசியா போரோடோ இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கியூபாவில் உள்ள பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் பணிகளை அன்சாரி நேரில் பார்வையிட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்