முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன் ஜன. 31 _ அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பனிப் புயலால் 6 முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

அமெரிக்கா கடந்த ஒரு மாதமாக கடும் பனிப் பொழிவில் சிக்கி தவிக்கிறது. நாடு முழுவதும் மைனஸ் டிகிரிக்கும் கீழ் குளிர் வீசுகிறது. 

இதனால் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அட்லாண்டா பகுதியில் திடீ         ரென கடும் பனிப்புயல் தாக்கியது. 

பல மணி நேரம் இந்த புயல் நீடித்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நகர முடியாமல் நின்றன. பல வாகனங்கள் விபத்தில் சிக்கின. 

பள்ளிக் கூடம் சென்ற மாணவர்களும் அலுவலகத்திற்கு சென்ற ஊழியர்களும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அங்கே யே நின்றனர்.  

டெக்சாஸ், கரோலினா பகுதிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. பனிப்புயலுக்கு 6 பேர் பலியானார்கள். 50 _க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

இதனால் 791 விபத்துகள் ஏற்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சாலைகளில் வாகனங்களில் சிக்கி இருந்தவர்களை மீட்பு படையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். 

பலர் 30 மணி நேரத்திற்கு மேலாக சாலைகளிலேயே சிக்கி தவிக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்