முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி 4 ஒவரில் மோசமான பேட்டிங்: டோனி வருத்தம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, ஏப்.8 - இந்தியாவை விழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை இலங்கை அணி கைபற்றியது.

முதலில் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரனனே எடுக்க முடிந்தது. வீராட் கோஹ்லி 58 பந்தில் 77 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து 6 விக்கெட் விதியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. சங்ககரா 35 பந்தில் 52 ரன் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். 6 ஆட்டத்தில் 319 ரன்கள் குவித்த வீராட் கோஹ்லி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

கடைசி 4 ஓவரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது.16 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்தது. ஆனாஸ் அடுத்த 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களே எடுக்கப்பட்டது. ஒரு பவுண்டரிகூட அடிக்கப்படவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. கேப்டன் டோனியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடைசி 4 ஓவரில் எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கடைசி 4 ஓவர்களில் தான் ரன்களை குவிக்க முடியும். ஆனால் அதை செய்ய தவரிவிட்டோம். இது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் அதே நேரத்தில் இலங்கையின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் ஸ்டம்புக்கு வெளியே மிக அருமையாக யார்க்கர் பந்தை போட்டனர். அனைத்து பந்துகளையும் சிறப்பாக வீசினர்.

மோசமான ஆட்டங்கள் காரணமாக வீரர்கள் மீது ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். என்த ஒரு வீரரும் மோசமாக விளையாட வேண்டும் என்று உண்மையில் நினைப்பதில்லை. யுவராஜ்சிங் சிறப்பாக விளையாட முயன்றார். ஆனால் சரியாக அமையாமல் போனது. அவரது நாளாக இருக்கவில்லை. இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்