முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அரசியின் ஹெலிகாப்டரை இயக்க பைலட் தேவை

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வண்டன், செப்.16 - இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் ஹெலிகாப்டரை செலுத்த பைலட் உடனடியாகத் தேவை. மாதம் ரூ.6.5 லட்சம் தரப்படும். இது குறித்து விளம்பரம் இங்கிலாந்து அரச குடும்பத்து வலையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த வேலைக்கான முக்கிய தகுதிகளில் ஒன்று, விவிஐபி எனும் மிக மிக முக்கிய நபர்களுக்கு பைலட்டாக இருந்த முன் அனுபவம் இருக்க வேண்டும். இரண்டு ஹெலிகாப்டர்கள் அரசியின் பயன்பாட்டில் உள்ளன. இவற்றைச் செலுத்தும் தலைமை பைலட் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

பைலட் உரிமத்துடன், முன் யோசனை, உடனடி முடிவெடுக்கும் அறிவுத் திறன், அவசர நிலைகளை எதிர்கொண்டு பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் இருந்தால் அம்மாதம் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இளவரசர் சார்லஸ், அவரது மகன்கள் வில்லியம்ஸ், ஹாரி ஆகியோர் முறையாக விமானம் ஏட்டும் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சார்லஸ் இங்கிலாந்து விமானப் படையில் பணியாறங்றியுள்ளார்.

இளவரசர் வில்லியம் மருத்துவ விமான பைலட்டாக இந்த மாதம் முதல் பணியாற்றவுள்ளார். அதற்கான மாத ஊதியம் சுமார் ரூ.3 லட்சமாகும். இதனை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அளிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்