முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டி: இந்தியாவுக்கு 2வது வெள்ளி பதக்கம்

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப் 27 - 17வது ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வருகிறது. நேற்று முன்தின 6வது நாள் முடிவில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 13 வெண்கலம் என 15  பதக்கங்கள் பெற்று இருந்தது. 7வது நாளான நேற்று இந்தியா 2வது வெள்ளி பதக்கத்தை வென்றது. இப்பதக்கம் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது. ஆண்கள் அணிகளுக்கான 25 மீட்டர் சென்டர் பியர் பிஸ்டல்  போட்டியில் குர்பீத்சிங், தமாங், விஜயகுமார் ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்றது.

இதில் இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்றது. தங்கம் பதக்கத்தை சீனா கைப்பற்றியது. துப்பாக்கி சுடுதலில் மட்டும்  இந்தியா 8 பதக்கங்களை பெற்று உள்ளது. இந்திய அணி 1740 புள்ளிகள் பெற்றது. தமாங் 581 புள்ளிகளும், குர்பீத்சிங் 580, விஜயகுமார் 579 புள்ளிகள் பெற்றனர். தங்கம் வென்ற சீனா 1742 புள்ளிகளிலும் வெண்கலம் வென்ற தென்கொரியா 1739 புள்ளிகளும் பெற்றன.

ஆண்களுக்கான 25 மீ ட்டர் சென்டர் பயர் பிஸ்டல் தனி பிரிவில் ஏமாற்றமே மிஞ்சியது. இதில் தமாங், குர்பீத்சிங், விஜயகுமார் ஆகியோர் ஏமாற்றமளித்தனர். இந்த பிரிவில் கத்தார் தங்கமும், சீனா வெள்ளியும், சிங்கப்பூர் வெண்கலமும் வென்றது. பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை லஜாகுமாரி கோஸ்வாமி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவர் 25 ஷாட் முடிவில்  6வது இடத்தில் இருந்தார். இதனால் பதக்க வாய்ப்பில் இருந்து வெளியேறினார். இந்த பிரிவில் இந்திய பெண்கள் அணி  6வது இடத்தை பிடித்தது. நீச்சல் போட்டியில் ஆண்கள் 50மீட்டர் பிரஸ் ஸ்போர்க் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் கெய்வால் தகுதி சுற்றில் முதலிடம் பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்