முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறு: இருளில் மூழ்கிய வங்கதேசம்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

டாக்கா, நவ.03 - இந்தியாவிலிருந்து வங்கேதசத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் கிரிட்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், வங்கதேசத்தின் பல பகுதிகள் நேற்று இருளில் மூழ்கின.

வங்கதேசத்தில் மின் பற்றாக் குறை அதிக அளவில் உள்ளது. மின்சாரத்தை இந்தியாவிலிருந்து அந்நாடு விலைக்கு வாங்குகிறது. இதற்கென மேற்கு வங்கத்தின் பஹராம்பூரிலிருந்து, மேற்கு வங்கத்தின் பெராமாரா வரை மின்சாரம் கொண்டு செல்லும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விநியோகப் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நேற்று முன் தினம் முதல் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக வங்கதேச மின்பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மசூம் பெருனி கூறும்போது, கிரிட்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் விநியோ கம் தடைபட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதுவரை சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் மின் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் மின் விநியோகம் சீரடையும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்