முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பு இல்லை

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா மக்களவையில் தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
31 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தில்் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே இருந்த போதிலும் உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஓரளவு அதிகமாகவே உள்ளது. 24 உயர்நீதிமன்றங்களில் உள்ள 635 நீதிபதிகளில் 25 பேர் பெண் நீதிபதிகள் ஆவர். உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு தற்போது இல்லை. அதே சமயம் நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் தலா 25 சதவீதம் அளவுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற முதல்வர்கள், தலைமை நீதிபதிகளின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தான் வழக்குகளை விரைவாக முடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதிகளவில் நீதிபதிகளுக்கான காலி பணியிடங்கள் ஏற்பட்டிருப்பதற்கு தற்போது இருக்கும் நீதிபதிகள் நியமன முறையே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து