முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சியினர் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. கடந்த 3 நாட்களில் கருப்புபண விவகாரம், இன்சூரன்ஸ் மசோதா, அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரச்னைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எழுப்பினர். குறிப்பாக, கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினருக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்தார். ஆனாலும் எதிர்கட்சிகள் திருப்தி அடையவில்லை. இந்நிலையில், கருப்பு பண விவகாரம் நேற்றும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தது. மத்திய அரசை கண்டித்து எதிர்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். நேற்று முன்தினம் கருப்பு குடையுடன் நாடாளுமன்றம் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், இன்று கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கருப்பு பண விவகாரம் குறித்து மாநிலங்களவையில் அவர் கோஷங்களை எழுப்பினர். ஐதராபாத் விமான நிலையத்துக்கு மீண்டும் ராஜிவ் காந்தியின் பெயரை சூட்டுமாறு காங்கிரஸ் எம்பிக்கள் கோஷமிட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளியால் பகல் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து