முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 மணி நேரம் காத்திருந்து சபரிமலையில் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் மண்டல பூஜையும், மகர விளக்கு பூஜையும் பிரசித்தி பெற்றவை. மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 14ம் தேதி மகர விளக்குபூஜை நடக்கிறது.
 
மண்டல பூஜையை விட அதிகளவில் தற்போது பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். இதனால் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. விடுமுறை காலங்களில் பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் வசதிக்காக தேவசம்போர்டு அடிப்படை வசதிகளை செய்துள்ளது.

அரவணை பிரசாதமும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 17ம் தேதி பந்தளம் கபடியார் அரண்மனையில் இருந்து சுவாமி ஐயப்பனின் திருஆபரண பெட்டடி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. 18ம் தேதி திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர சங்கரம் பூஜை நடைபெறுகிறது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து