முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் குடியரசு தினவிழா:கவர்னர் ரோசய்யா கொடியேற்றினார்.

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

66-வது குடியரசு தினவிழா சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.,  சென்னை கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசய்யா தேசியக் கொடியேற்றினார்.

நாட்டின் 66 வது குடியரசு தினவிழா சென்னை கடற்கரை காந்தி சிலை அருகே நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவில்  தமிழக கவர்னர் ரோசய்யா தேசிய கொடியேற்றினார். அவர் கொடியேற்றியபோது,ஹெலிகாப்டரில் இருந்து வண்ண மலர்கள் தூவப்பட்டது.  இந்த விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகியவற்றை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு கவர்னர்  .ரோசய்யா சென்றார். அங்கு மலர்வளையம் வைத்து, பல்வேறு போர்களில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதன்பின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு கவர்னர்  வந்தார். அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். இதன்பின், ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்களின் தலைமைப் படைத் தலைவர், கடற்படை, வான்படை, காவல் துறை தலைமை இயக்குநர், கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு), சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர் ஆகியோரை கவர்னருக்கு  அறிமுகம் செய்து வைத்தார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு கவர்னர் .ரோசய்யா தேசியக் கொடி ஏற்றினார். அப்போது, வானில் பறந்த ஹெலிகாப்டர் தேசியக் கொடியின் மீது மலர்களைத் தூவியது பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்பட பல்வேறு வகையான பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில்  வழங்கப்படும். இந்த ஆண்டு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் 5 பேருக்கும், காந்தியடிகள் காவலர் பதக்கம் நான்கு பேருக்கும், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை சிறப்பு விருது ஆகியன தலா ஒருவருக்கும் வழங்கப்பட்டது.

விருது நிகழ்வுக்குப் பிறகு, பள்ளி-கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் ராஜஸ்தான், கேரளம், அசாம், தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காண்பித்தனர்.

அரசுத் துறைகளில் செயல்படுத்தி வரும் முக்கியத் திட்டங்களை பொது மக்களுக்கு விளக்கும் வகையில் 25 துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில், செய்தி-மக்கள் தொடர்புத் துறை, காவல் துறை, தோட்டக் கலைத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தன. கலை-நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்ற பள்ளி-கல்லூரிகள், அலங்கார ஊர்திகள் ஆகியவற்றுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பரிசுகள் ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து