முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது: முதல்வர் கடிதம்

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது  என்று முதல்வர்   ஓ.பன்னீர்செல்வம்   பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 24.7.1983–ம் ஆண்டு முதல் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

2013–ம் ஆண்டுக்கு பிறகு எந்த அகதிகளும் வரவில்லை. இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கைக்கு திரும்பி உள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 ஈழத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர், 107 முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை அவர்கள் நாட்டுக்கு திரும்பி அனுப்ப மத்திய அரசு தமிழக உயர் அதிகாரியை வருகிற 30–ந்தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு அனைத்து உதவிகளும் புரட்சித்தலைவி அம்மா அறிவித்த ஆணைப்படி வழங்கப்பட்டு வருகிறது. சமூக நல திட்டங்கள் அடிப்படையில் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பென்ஷன் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது இலங்கை வடகிழக்கு பகுதியில் இன்னமும் சுமூகமான சூழ்நிலை ஏற்பட வில்லை. ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அங்கு நிலைமைகள் மாறும் வரை தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது.

இலங்கையில் உள்ள அரசு தமிழர்களின் மனதில் உறுதியான நம்பிக்கை யூட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுத்த பிறகே தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து